1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2023 (17:36 IST)

அரசு வேலை கிடைத்தவரை கடத்தி மகளுக்கு திருமணம் செய்த தொழிலதிபர்.. போலீஸ் விசாரணை..!

Marriage Fasting
அரசு வேலை கிடைத்த 24 மணி நேரத்தில் இளைஞரை கடத்தி தனது மகளுக்கு தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகார் மாநிலத்தில்  செங்கல் சூளை வைத்திருக்கும் தொழில் அதிபர் ஒருவர் தனது மகளுக்கு அரசு வேலை செய்பவர்தான் மாப்பிள்ளை ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார் 
 
இந்த நிலையில் பீகார் அரசு பணியாளர்கள் ஆணையத் தேர்வில் தேர்ச்சி அடைந்து ஆசிரியர் பணி  கௌரவம் குமார் என்பவர் பெற்றதாக அவருக்கு தகவல் வெளியானது. உடனே அவருடைய வீட்டிற்கு சென்று துப்பாக்கி முனையில் அவரை கடத்தி கோவிலில் தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டார் 
 
அரசு வேலையில் உள்ள இளைஞர்களை சட்டவிரோதமாக கடத்தி கட்டாய திருமணம் செய்யும் சம்பவங்கள் பீகாரில் அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது மாதிரியான கட்டாயத் திருமணத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
Edited by Siva