வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (14:48 IST)

மதுபோதையில் போலீஸுக்கு முத்தம் கொடுத்த வாலிபர் ! வைரல் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் போனால என்ற பண்டிகை  அம்மாநில மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று இரவு டி. ஆர். டி . காலனி வித்யாநகரில்  போனால பண்டிகையொட்டி திருவிழா நடைபெற்றது. 
இந்த  விழாவில் கலந்துகொண்ட ஆண்கள்  திருவிழா ஊர்வலத்தின் போது, மது அருத்திவிட்டு நடனம ஆடிக்கொண்டிருந்தனர். அந்த சமயம் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஸ். ஐ க்கு , ஒரு போதை வாலிபர் திடிரென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த எஸ். ஐ.  மகேந்திரன் அந்த வாலிபரின் கனத்தில் அறைந்தார். ஆனால் எதுவும் நடக்காத மாதிரியே அந்த போதை இளைஞர் நடனமாடியபடியே சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. இந்நிலையில் எஸ்.ஐ மகேந்திரனுக்கு முத்தம் கொடுத்த பானு மீது , அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தது. அத்துமீறி நடந்துகொண்டது ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பானு என்ற  வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.