ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (17:03 IST)

கந்து வட்டி கேட்டு மிரட்டும் செயலிகள் மீது புகாரளிக்கலாம்- போலீஸார் தகவல்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் ஆன்லைனின் கடன் வாங்கிய நிலையில் அவர் பணத்தைத் திரும்ப செலுத்தியபோதிலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால் போலீஸில் புகாரளித்தார்.  இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவடம் பெரியபுதூர் அருண் நகரில் வசித்து வருபவர் உனிஷ்பாட்சா. இவர் கிஷ்ட், ஸ் ஈட், க்ளவுட் உள்ளிட்ட செயலிகள் மூலம் ரூ.10 லட்சம் கடன் பெற்றார்.

அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்தியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டுமென  அந்த செயலி நிறுவனம் அவரை வற்புறுத்தியது.

அவரது புகைப்படங்களை மார்பிங் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, உனிஷ்பாட்ஷா சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்துள்ளார். இதையடுத்து அந்தச் செயலி நிறுவனங்கள்  மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கந்து வட்டி கேட்டு மிரட்டும் செயலிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.