இன்றும் நாளையும் கனமழை: கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆறு மாறப்பட்டவர்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுதப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி
இதன்படி கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, திரிச்சூர், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் நாளை அதாவது ஜூலை 14-ம் தேதி இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Edited by Siva