வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (13:54 IST)

கனமழையால் டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளம்.. மேம்பாலத்தில் கூடாரம் அமைத்த பொதுமக்கள்..!

கனமழையால் டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளம்.. மேம்பாலத்தில் கூடாரம் அமைத்த பொதுமக்கள்..!
டெல்லியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதை அடுத்து யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
யமுனை ஆற்றின் இரு தரையிலும் உள்ள வீடுகள் நீரில் மூழ்கி விட்டதாகவும் இதனை அடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதை அடுத்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளதாகவும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran