கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு அக்டோபர் 26 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.