வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (06:53 IST)

தேசிய விவசாயிகள் தின வாழ்த்துக்கள்!

தேசிய விவசாயிகள் தின வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
 
விவசாயிகள் என்றால் விடுமுறை கிடையாது, மாத சம்பளம் கிடையாது, வருங்கால வைப்பு நிதி கிடையாது, ஓய்வு ஊதியம் கிடையாது இருந்தாலும் முகம் சுளிக்காமல் நாம் வயிறு நிறைய வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள்
 
அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு நாம் இன்றைய விவசாயி தினத்தில் நமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வது கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது என வள்ளுவர் தெரிவித்துள்ளதை அடுத்து அவருடைய வாக்கின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நமது வாழ்த்துக்களை என்று தெரிவித்துக் கொள்வோம் 
 
ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயி தான் என்பதை மனதில் கொண்டு, அவர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால்தான் நாம் நம்முடைய வேலையை சிறப்பாக செய்ய முடிகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.