வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (16:48 IST)

டெல்லி ஜூம்மா மசூதிக்குள் பெண்கள் நுழைய தடையா? மகளிர் அமைப்பு கண்டனம்!

mosque
டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதியில் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதுகுறித்து  ஜூம்மா மசூதி செய்தி தொடர்பாளர் கூறியபோது ஜூம்மா மசூதியில் பெண்கள் தனியாக வரும் போது முறையற்ற செயல்கள் நடப்பதாகவும் அத்தகைய செயல்களை தடுக்கும் நோக்கத்துடன் தனியாக வரும் பெண்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் திருமணமான பெண்கள் கணவருடன் வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்
 
இந்த நிலையில் ஜும்மா மசூதியில் பெண்கள் நுழைய தடை விதித்திருக்கும் முடிவு தவறானது என்றும் இது குறித்து மசூதி இமாமுக்கு நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran