புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:19 IST)

மலைப்பாம்பை அலோக்காய் தூக்கி கட்டிய பெண்: வைரல் வீடியோ!!

கேரளாவில் பெண் ஒருவர் மலைப்பாம்பின் தலையை பிடித்து அதை பையில் போட்டுக்கட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கேரளாவில் உள்ள எர்ணாக்குளத்தில் பெண் ஒருவர் ஒரு மரத்தடியில் மறைந்து கிடைக்கும் மலைப்பாம்பை தைரியமாக அதன் தலைப்பகுதியைப் பிடித்து பையில் போட்டு கட்டுகிறார்.
 
மலைப்பாம்பை பிடிப்பதற்கு அந்த பெண்ணுடன் கடற்படை வீரர்கள், மற்றொரு பெண் உள்ளிட்ட சிலர் உதவியுள்ளனர். அந்த மலைப்பாம்பு சுமார் 20 கிலோ எடைகொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.