செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (10:43 IST)

மனைவியைக் கொலை செய்ததாகக் கணவன் கைது…. ஆனால் சில மாதங்களில் உயிரோடு வந்த பெண்!

லதா சிங்

உத்தரபிரதேசத்தில் மனைவியைக் கொலை செய்ததாக கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சில மாதங்களில் அவர் உயிரோடு திரும்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரன் விஜய் சிங் . இவருக்கு லதா என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனைகள் எழுந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் லதாவின் தந்தை காவல் நிலையத்தில் தன் மருமகன் மகளைக் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார்.

போலீஸார் விஜய் சிங்கின் வீட்டுக்கு செல்ல அங்கு ரத்தக் களறியாக இருந்துள்ளது. விஜய்யை போலிஸார் கைது செய்ய மகள் ருத்ரா தந்தைதான் அம்மாவைக் கொலை செய்ததாக சாட்சி சொன்னார். ஆனால் இந்த வழக்கில் லதாவின் உடல் மட்டும் கிடைக்கவில்லை.

இப்போது விஜய் சிறையில் இருக்கும் நிலையில் திடீரென லதா வீட்டுக்கு உயிருடன் வந்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க பொலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. தன் கணவனைப் பழிவாங்கவே அந்த பெண் இதுபோல நாடகமாடியது தெரியவந்துள்ளது. உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.