புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (19:04 IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசம் : கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி !

திருவனந்தபுரத்தை அடுத்துள்ள போத்தங்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (35). இவருக்கு ராகி என்ற மனைவி உள்ளார்(30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
கடந்த 12 ஆம் தேதி வினோத் ராகி மற்றும் குழந்தைகள் ஆலயத்திற்குச் சென்றனர். பின்னர் வீடு திரும்பியதும் சிறிதுநேரத்தில் வினோத் மயங்கி விழுந்து இறந்தார்.
 
ஆனால் அக்கம் பக்கத்தில் வினோத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
 
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் வினோத்தின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் வினோத் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்தது தெரியவந்தது.
 
இதுகுறித்து ராகியிடம் கிடுக்கிபிடியாக போலீஸார் விசாரணை செய்தனர். இதில் வினோத் வீட்டிற்கு அவரது உறவினர் மனோஜ் அடிக்கடி வந்துசென்றுள்ளது தெரிந்தது.
 
மேலும் சம்பவத்தன்று தாயார் ராகி, மனோஜுடன் சேர்ந்து வினோத்தின் கழுத்தை நெறித்துக் கொல்வதை அவரது குழந்தைகள் பார்த்துள்ளனர். இதை போலீஸாரிடம் சாட்சியாகக் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து ராகி தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 
இதுகுறித்து மனோஜ் போலீஸாரிடம் கூறியதாவது :
 
வினோத் , உறவினர் என்பதால் நான்  அடிக்கடி அவரதுவீட்டிற்குச் சென்று வருவேன். நாளடைவில் அவரது மனைவி ராகியுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.வினோத் இல்லாத நேரத்தில் உல்லாசமாக  இருப்போம். இது வினோத்துக்குத் தெரிந்ததால் எங்களை கண்டித்தார். இதனால் அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்தோம். அதன்படி வீட்டில், அவரது மனைவி ராகியுடன் சேர்ந்து  வினோத்தை கழுத்தை நெறித்துக்கொன்றோம். பின்னர் நாடகமாடினோம் ஆனால் போலீஸார் எங்களைக் கண்டு பிடித்துவிட்டனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அதன் பின்னர் கொலைக்குற்றவாளிகள் இருவரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது இரு  குழந்தைகளும் இதற்கு  முக்கிய சாட்சி கூறினர்.
 
இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.