செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (12:07 IST)

டிக் டாக்கில் பிரபலமான மனைவி – கொலை செய்த கணவன் !

டிக்டாக்கில் எந்நேரமும் வீடியோ வெளியிட்டுக் கொண்டும் போனில் அதிகநேரம் பேசிக்கொண்டும் இருந்த பெண் ஒருவரை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

கோவையில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிளம்பர் கனகராஜ். இவரது மனைவி நந்தினி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கருத்துவேறுபாட்டால் கடந்த ஒரு வருடமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் தாய் நந்தினியிடம் வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக நந்தினி டிக் டாக்கில் அதிக அளவில் வீடியோக்கள் உருவாக்கி வெளியிட்டு வந்துள்ளார். மேலும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளார். இந்த விஷயங்களை அறிந்த் கனகராஜ் நந்தினியிடம் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கனகராஜ் செல்போன் மூலம் நந்தினியை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் நேரமாகியும் செகன்ட் காலில் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் மது அருந்திவிட்டு, நந்தினியைப் பார்க்க நேரில் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே நந்தினியைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். ரத்தத்தில் மிதந்த நந்தினி கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.சந்தேகத்தாலும் கோபத்தாலும் மனைவியைக் கொன்று விட்டு தனதுக் குழந்தைகளை அனாதையாக்கியுள்ளார் கனகராஜ்.