1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 நவம்பர் 2017 (21:24 IST)

திருமணமான 2 நாளில் நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!

திருமணமான இரண்டே நாட்களில் கணவனை ஏமாற்றிவிட்டு நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தது உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விவசாயி அஜய் தியாகிக்கும், டேராடூனை சேர்ந்த கயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம்மானது. இவர்களது திருமணம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து தங்க வெள்ளி நகைகள் வழங்கியுள்ளனர். 
 
இந்நிலையில், மணமகள் தனக்கு உடல் நலம் சரி இல்லை என்று கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். 
 
அப்போது மனைவி கோழிக்கறி வேண்டும் என்று கேட்டு உள்ளார். இதனால் சற்று தொலைவில் உள்ள அசைவ உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது குளீர்பானம் வேண்டும் என கண்வரிடம் கேட்டு உள்ளார். குளிர்பானம் வாங்கி விட்டு திரும்பி வந்தால் அங்கு கயாவை காணவில்லை. சுமார் 4 மணி நேரமாகியும் அவர் கிடைக்கவில்லை.
 
பின்னர்தான் நகைகளுடன் மனைவி ஓடிவிட்டார் என்பது அவருக்கு புறிந்துள்ளார். டாக்டரிடம் செல்ல வேண்டும் என்று கூறி நகைகளுடனேயே கயா புறப்பட்டு உள்ளார்.  இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இது வழக்கமான கும்பலின் செயலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.