பேஸ்புக் நட்பு டூ கள்ளக்காதல்: கணவனை போட்டு தள்ளிய மனைவி!
மேற்கு வங்க மாநிலத்தில் பேஸ்புக் நட்பு கள்ளக்காதலாக மாறி மனைவி கணவனை போட்டுத்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெத்னிப்பூர் நகரை சேர்ந்த மந்துப்பத்ரா, தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருணா. இவருக்கு பேஸ்புக் மூலம் பல நண்பர்கள் இருந்தனர். அதில், சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரரும் ஒருவர்.
அருணாவும், சஞ்சய்குமார் அடிக்கடி பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது வழக்கம். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சஞ்சய்குமார் அடிக்கடி தென்கானலுக்கு வந்து அருணாவை சந்திப்பார்.
இந்த விவகாரம் மந்துப்பத்ராவுக்கு தெரிய வந்து, அவர் அருணாவை கண்டித்தார். இதனால், கணவரை கொன்றுவிட்டு சஞ்சய்குமாரை திருமணம் செய்து கொள்ள அருணா முடிவு செய்தார்.
திட்டம் தீட்டி, கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர், சஞ்சய் குமாரை வீட்டுக்கு அழைத்து கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக போலீசில் நடகமாடினார். ஆனால், போலீஸாருக்கு இதில் சந்தேகம் வர, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அருணாவும், சஞ்சய்குமாரும்தான் கொலை செய்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.