வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (16:06 IST)

ஜாகிர் நாயக் தலையை துண்டித்தால் ரூ:50 லட்சம்: சாத்வி பிராச்சி

ஜாகிர் நாயக் தலையை துண்டித்தால் ரூ:50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் இயக்க முன்னாள் தலைவர் சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார்.


 

 
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சால், தாம் ஈர்க்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்.
 
அதனால் ஜாகிர் நாயக்கின் தொலைக்காட்சி சேனல் மூடக்கப்பட்டது. அவரை ஒரு தீவிரவாதியாகவே பலரும் சித்தரிக்க தொடங்கினர். அதைத் தொடர்ந்து ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தம் மீதான விமர்சனங்களுக்கு ஊடகங்கள் மூலம் நாளை பதிலளிக்க உள்ளதாக ஜாகிர் நாயக் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி, உத்ரகாண்டில் உள்ள ரூர்கியில் பேசும் போது ஜாகிர் நாயக்கின் தலையை துண்டிக்கும் நபருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சாத்வி பிராச்சி பாஜக தலைமையிலான மத்திய அரசில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.