1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மத்திய அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சர்கள் யார் யார்?

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது
 
இதன்படி காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா அமைச்சர் ஆவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவல், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, மகாராஷ்டி ராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத்தம் முண்டே, உ.பி. பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், பாஜக மூத்த தலைவர் வருண் காந்தி, மாநிலங்களவை எம்.பி. அனில் ஜெயின், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ஆகியோர் அமைச்சர்கள் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதியில் தோல்வி அடைந்ததால் இந்த முறையும் தமிழகத்திற்கு அமைச்சர் பதவி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.