செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (16:36 IST)

ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு என தகவல். 
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடியாக அதாவது 35,122,290ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10.37 லட்சமாகவும் அதாவது 1,037,524 எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக அதாவது 26,117,241 எனவும், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,267ஆகவும் உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,547,413 எனவும், பலியானோர் எண்ணிக்கை 101,812 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 5,506,732 எனவும் உயர்ந்துள்ளது.  இந்நிலையில், இந்தியாவில் ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல். 
 
ஆம், ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு. கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.