மோடி ஆட்சியில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலக என்ன காரணம்..?
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் தொகுதி பா.ஜ.க எம்பி சாவித்ரிபாய் புலே, இரு தினங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து வெளியேறியதுடன் தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:
பா.ஜ.க . ஆர்.எஸ்.எஸ். போன்றவை மதத்தின் பெயரால் சமூகத்தில் பிரிவினை தோற்றுவிக்கின்றன. சட்டமேதை அம்பேத்கர் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுத்த பாஜக முயல்கிறது. சிலைகள் போன்றவற்றிற்கு செலவு செய்து வருகின்றனரே தவிர நாட்டின் வளர்ச்சியை பற்றி கவலைப் படுவதில்லை இவ்வாறு கூறினார்.இது தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜகவை விமர்சித்து வந்த மத்திய இணை அமைச்சரும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவருமான உபேந்திர குஸ்வாஹா இன்று தன் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.