புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (17:19 IST)

பான் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன பாதிப்பு ? முக்கிய தகவல்

இந்தியாவில் தொழில் தொடங்க மற்றும் பல்வேறு பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு எண் அவசியமான ஒன்றாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்து 20 நாட்களுக்கு பிறகே பான் எண் கிடைக்கும் என்பதால் பலர் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்தன. இந்நிலையில் ஆதார் கார்டு அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் வழிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது.  பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 30க்குல் பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதை இணைக்கத் தவறினால் மியூச்சுவல் பண்ட் எஸ்பிஐ பாதிக்கும் எனவும், ஃபிக்ஸ்ட் டெபாசிஸ் போட்டிருப்பவர்களுக்கு 10%குப் பதில் 20% டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15G, 15H படிவங்களை சமர்பிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.