1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 மே 2020 (08:41 IST)

கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்: மோடி, அமித்ஷாவுக்கு மம்தா கோரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியை மேற்கு வங்க அரசு சரியாக கையாளவில்லை என்று அமித்ஷா தன்னிடம் கூறியதாகவும் அதற்கு பிரதமரும் நீங்களும் வந்து அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தான் பதில் அளித்ததாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் கூறியபோது ’அமித்ஷாவுடன் தான் சமீபத்தில் தொலைபேசியில் பேசியபோது மேற்கு வங்க அரசு கொரோனா வைரஸ் குறித்த நடவடிக்கைகளை சரியாக கையாளவில்லை என்று குற்றம் சாட்டினார். அதற்கு நான் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரான நீங்களும் மேற்குவங்க மாநிலத்திற்கு வந்து கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினேன் என்றும், அதற்கு பதிலளித்த அமிர்ஷா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அதிகாரத்திலுள்ள போது நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று கூறியதாகவும் அதனை அடுத்து தான் அவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்
 
மேலும் பீகார் உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய மாநிலத்தில் மட்டும் கொரோனா நடவடிக்கையை குற்றம் சொல்வதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் எங்கே இருந்தாலும் அதனை பரவாமல் தடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றும் அவர் மேலும் கூறி உள்ளார் 
 
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமரும் அமித்ஷாவும் வாருங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது