திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 மே 2020 (07:55 IST)

சென்னை அரசு மருத்துவமனையில் தலைமை பெண் நர்ஸ் உயிரிழப்பு!

தலைமை பெண் நர்ஸ் உயிரிழப்பு!
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை பெண் நர்சாக பணிபுரிந்து வந்த ஜோன் மேரி பிரிசில்லா என்பவர் கொரோனாவால் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை நங்கநல்லூரில் சேர்ந்த 58 வயது பெண் தலைமை செவிலியர் மேரி பிரிசில்லா. இவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மற்ற செவிலியர்களுக்கு பணி நேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தார்
 
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 26ஆம் தேதி பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் தலைமை பெண் நர்ஸ் இவர்தான் என்பதால் மருத்துவமனை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பொதுமக்களை கொரோனா வைரஸில் இருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நர்ஸ்கள்  மற்றும் டாக்டர்களே உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது