வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 மே 2020 (08:11 IST)

பிரதமர் மோடியின் பாலோயர்களில் 60 சதவீதம் பேக் ஐடிதான் – வெளியான ஆய்வு முடிவு!

டிவிப்ளோமசி என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவு ஒன்றில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் எனக் கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களிலேயே டிவிட்டரில் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவராக பிரதமர் மோடி இருக்கிறார். மேலும் அவர் தீவிரமாக சமூகவலைதளங்களில் இயங்கியும் வருகிறார். இந்நிலையில் அவரை பின் தொடர்பவர்களில் 60 சதவீதம் பேர் (2.4 கோடி) பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள் என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

டிவிப்ளோமசி என்ற நிறுவனம் உலக தலைவர்களின் டிவிட்டர் பாலோயர்களைப் பற்றி நடத்திய ஆராய்ச்சியில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு டிவிட்டர் அல்காரிதம், மற்றும் சம்மந்தப்பட்ட நபர் கடைசியாக பதிவு செய்த டிவிட் மற்றும் அவர்கள் வேறு யார் யாரை பாலோ செய்கிறார்கள் போன்றவற்றை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.

மோடி மட்டும் அல்லாது ட்ரம்ப் (37 சதவீதம்), போப் பிரான்சிஸ்(59 சதவீதம்), அதே போல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கணக்கையும் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் போலியானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.