வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: புதன், 27 மே 2020 (23:00 IST)

ஹாலிவுட் ரேஞ்சுக்கு அசத்தும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஹாலிவுட் ரேஞ்சுக்கு அசத்தும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட்டின் கூடை நிறைய காய்கறி, வாழ்த்திய கரூர் மக்கள்!
 

 கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மக்களின் பிரச்னைகளை தீர்க்க மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அம்மா அரசு தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்களும் தங்கள் தொகுதிகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே கரூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும், அவரது எம்.ஆர்.வி டிரஸ்ட்டும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர், குளித்தலை அம்மா உணவகங்களில் நாள்தோறும் 5,000 க்கும் மேற்பட்டவர்கள் இலவசமாக உணவருந்துகின்றனர். இலவச உணவுக்காக முதல்கட்டமாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கரூர் உழவர் சந்தை, அரசு மருத்துவக் கல்லூரி பழைய மருத்துவமனை மற்றும் குளித்தலை ஆகிய இடங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும்  இலவசமாக உணவு வழங்கவும் மாண்புமிகு  அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கையால் ஏழை மக்கள் வயிறார பசியாறி வருகின்றனர்.

அதேபோல, பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன்கொண்ட கபசுரக் குடிநீரை மாண்புமிகுைஅமைச்சர் M.R.விஜயபாஸ்கர் அவர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் கபசுரக்குடிநீரையும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகிக்கவும் மாண்புமிகு அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். 

தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும், அரிசி-பருப்பு-காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களையும் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் தொடர்ந்து அளித்து வருகிறார். அமைச்சரின் தீவிர மக்கள் நலப்பணியால், கொரோனா காலத்திலும் மக்கள் அச்சத்தை மறந்து சற்று நிம்மதியாக வாழ்கின்றனர். அமைச்சரின் நலத்திட்டப்பணிகள் நேற்றும் கரூரில் தொடர்ந்தது.

தற்போது, கரூரில் உள்ள தன் தொகுதி ஏழை மக்களுக்கு கூடை நிறைய காய் கறிகளை வழங்க அமைச்சர் முடிவு செய்தார்.அதன்படி , ஒரு கூடை நிறைய முட்டை கோஸ், தக்காளி, உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை மக்களுக்கு அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் வழங்கினார்.

மக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் வாங்கி சென்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடை நிறைய காய்கறிகளை வாங்கி மகிழ்வுடன் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களை வாழ்த்தி சென்றனர். மேலும், ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்தும் வகையில், காய்கறிகள் நிறைந்த கூடைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மக்களை வியப்புக்குள்ளாக்கியது. தற்போது வரை கரூர் மாவட்ட அளவில் கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட்டின் சேவையும், அந்த இயக்கத்தினை சார்ந்த நிர்வாகிகளின் அயராத உழைப்பும், தமிழக அளவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களது சேவையும் ஒரு ஹாலிவுட் படத்தினை நினைவுபடுத்தும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.