வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (09:57 IST)

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ விரும்ப மாட்டார்கள்: வெங்கையா நாயுடு!

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையை இஅழந்து இந்தியாவில் அகதிகளாக வந்து வாழ மாட்டார்கள் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 
 
சென்னை ஐஐடி-யில் நடந்த மாணவர்களுடனான கலந்துறையாடலில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிஏஏ குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு... 
 
சிஏஏ, என்பிஆர் குறித்து முழுமையாகப் படித்து, அதன் பின்னணியைத் தெரிந்துகொண்டு, ஜனநாயக ரீதியில், அமைதியான முறையில் மக்கள் தங்கள் செயல்களை வெளிப்படுத்த வேண்டும். 
 
மக்களிடையே ஆதரவு பெற முடியாத சிலர் சுய லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி மக்களை திரட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழ விரும்புகிறார்கள் என்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.