ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (13:02 IST)

வாக்குச் சாவடியிலேயே தடுப்பூசி: டெல்லி அரசின் புதிய அறிவிப்பு

வாக்களித்த இடத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புதிய பரப்புரையை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடங்கியிருக்கிறார்.

 
இதன்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எங்கு வாக்களித்தார்களோ அங்கேயே அவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டும். இந்த திட்டத்தின் அடிப்படையில் கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
"பலர் இன்னும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கே வரவில்லை" என்று கூறிய கெஜ்ரிவால், அதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவேண்டிய நேரத்தை அவர்களிடம் வழங்குவார்கள் என்றார்.
 
தடுப்பூசி ஏன் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைத்து, சம்மதிக்க வைப்பது தொடர்புடைய ஊழியரின் பொறுப்பாக இருக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியின் 70 வார்டுகளில் இந்தத் திட்டம் தொடங்க இருக்கிறது.