செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (16:40 IST)

நள்ளிரவு 12 மணிக்கு மேல் நல்ல செய்தி கிடைக்கும்: சுரங்க விபத்தின் மீட்புப்பணிகுழு தகவல்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கிய நபர்களை மீட்க மீட்பு படையினர் போராடிவரும் நிலையில் இன்று நள்ளிரவுக்குள் நல்ல செய்தி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்  
 
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் கடந்த முறை பாறைகள் இடையில் விழுந்ததால் பணியை நிறைவு செய்ய முடியவில்லை என்றும்  மீட்பு குழுவில் உள்ள ஒருவர் தமிழக  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
மேலும் நேற்று இரவு இரண்டு குழாய்களை சுரங்கத்திற்கு செலுத்தியுள்ளோம் என்றும் இன்று ஒரு குழாய் செலுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த முறை வெற்றிகரமாக பணியை நிறைவடையும் என்றும் சுரங்கத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran