வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (13:37 IST)

பாம்பை கடிக்க வைத்து தொழிலதிபர் கொலை: ரகசிய தொடர்பில் இருந்த பெண் காரணமா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் 30 வயது தொழிலதிபர் ஒருவர் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இறந்து கிடந்தார். அவரது உடலை பரிசோதனை செய்தபோது பாம்பு கடித்ததால் உயிர் இழந்தது என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் தொழில் அதிபரின் செல்போன்களை ஆய்வு செய்தபோது மகி என்ற பெண் அவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.  மேலும் அந்த பெண் அடிக்கடி பாம்பு வளர்ப்பவரிடம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து பாம்பு வளர்ப்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தபோது தொழில் அதிபர் உடன் ரகசிய தொடர்பில் இருந்த பெண், தன்னிடம் பாம்பை வாங்கி சென்றதாக தெரிவித்தார். 
 
இதனை அடுத்து தொழிலதிபரை வைத்து கடிக்க வைத்து இளம்பெண் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் கொண்டனர். இந்த வழக்கில் இளம் பெண் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 
Edited by Mahendran