துயரத்தில் ஆழ்த்திய துர்கா பூஜை; தீ விபத்தில் சிக்கிய பக்தர்கள்!
உத்தர பிரதேசத்தில் துர்கா பூஜையில் ஏற்பட்ட தீ விபத்தில் பக்தர்கள் பலர் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று உத்தர பிரதேச மாநிலம் பதோஹியில் பந்தல் அமைக்கப்பட்டு துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வந்தது.
அப்போது திடீரென அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பந்தலில் பரவியதால் பலருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த தீ விபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துர்கா பூஜையில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் தீ விபத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited By: Prasanth.K