தீவிரமடையும் ஒமிக்ரான்! உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் திரிபடைந்த கொரோனா வைரஸான் ஒமிக்ரானின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதை தொடர்ந்து தற்போது உத்தரபிரதேசத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.