சில்மிஷம் செய்தவர்களை தட்டிக்கேட்ட மாணவி சுட்டுக்கொலை! – உ.பியில் மேலும் ஒரு கொடூரம்!
உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பெண் கொலை சம்பவம் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத சூழலில் சில்மிஷம் செய்தவர்களை கேள்வி கேட்டதற்காக சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசம் பிரஸோபாத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை சிலர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த சிறுமி அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள் தட்டிக்கேட்டால் கூட சுட்டுக்கொல்வது என்ன நியாயம் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.