திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (16:38 IST)

”இது ஃபட்நாவிஸின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்”.. தாக்கரே குற்றச்சாட்டு

மஹாராஷ்டிராவில் ஃபட்நாவிஸ் பதவியேற்றதை தொடர்ந்து, “இது மக்களின் மேல் நடத்தப்பட்ட ”ஷர்ஜிக்கல் ஸ்டரைக்” என குற்றம் சாட்டியுள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்பவார், “பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல, இது அஜித் பவாரின் சொந்த முடிவு” என கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ”தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றது மஹாராஷ்டிரா மக்கள் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக். இதற்கு மக்கள் தகுந்த முறையில் பழி தீர்ப்பார்கள்” என கூறியுள்ளார்.