தொடரும் அவலங்கள் : 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ; 2 சிறுவர்கள் கைது
5 வயது சிறுமியை ஒரு சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 9 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.ல்.ஏ உள்ளிட்ட 5 பேரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கண்டபல்லபபூர் எனும் பகுதியில் வசிப்பவரின் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, 10 மற்றும் 14 வயதான இரு சிறுவர்கள் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இரு சிறுவர்களையும் கைது செய்தனர். மேலும், அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.