முடக்கிய ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கு விடுவிப்பு
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை டிவிட்டர் நிறுவனம் இன்று விடுவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் டிவிட்டர் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த முடக்கத்தை டிவிட்டர் நிறுவனம் இன்று விடுவித்துள்ளது. ராகுல் காந்தியுடன், இன்னும் சில காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தது. அவையும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.