டிக்கெட் இல்லாமல் பயணித்தவரை அறைந்த டிடிஆர் கைது
மும்பையில் நேற்று ரயிலில் டிக்கெட் இல்லமல் பயணித்தவரை அறைந்த டிடிஆர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை தாதர் மத்திய ரயில் நிலையத்தில் நேற்று மாலை டிடிஆர் அஜித் பிரசாத் என்பவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த தீரஜ் அகர்வால் என்பவரிடம் டிடிஆர் டிக்கெட் கேட்க அவர் டிக்கெட் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் டிடிஆர் தீரஜ் அகர்வாலை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அபராதம் செல்லுத்துமாறு கூறியுள்ளார். தீரஜ் அகர்வால் அபராதம் செலுத்த மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தீரஜ் அகர்வால் அலுவலத்தை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த டிடிஆர் அவரை அறைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தீரஜ் அகர்வால் காவல்துறையில் டிடிஆர் மீது புகார் அளித்தார். கவல்துறையினர் டிடிஆர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து இன்று டிடிஆர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.