புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (11:37 IST)

ஐஐடி-யில் சைக்கிள்களை திருடி ஆன்லைனில் விற்ற இன்ஜினியர்...

தான் படிக்கும் ஐஐடி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்களை, பொறியியல் மாணவர் ஒருவர் திருடி விற்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மும்பையில் ஐஐடி கல்வி வளாகத்தில் தொடர்ந்து சைக்கிள்கள் திருடப்பட்டு வந்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. தொடக்கத்தில் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டு போலீஸ் அமைதி காத்தது. ஆனாலும், சைக்கிள் திருடுபோவது குறையாததால் சுதாரித்த போலீசார் களத்தில் இறங்கினர்.
 
அப்போது, ஐஐடி-யின் நுழைவுவாயிலில் ஒரு சைக்கிளின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு மாணவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்தான் தொடர்ச்சியாக சைக்கிள்களை திருடி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
 
மேலும், அவர் பெயர் ஹர்சந்திர ரவிந்தர கதேகர் என்பது, அங்கு அவர் ஆராய்ச்சி மாணவனாக படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. திருடிய சைக்கிள்களை விற்று, தனது ஆராய்ச்சி படிப்பிற்கு அவர் செலவிட்டு வந்துள்ளார். வீட்டில் தற்போது 7 சைக்கிள்களை வைத்திருப்பதாகவும், மற்ற சைக்கிளை ஆன்லைனில் விற்று விட்டதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.