திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (12:39 IST)

டிசம்பர் 31... மீண்டும் சுனாமி; இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்: அதிர்ச்சி தகவல்!!

டிசம்பர் 3க்குள் மீண்டும் சுனாமி பேரலைகல் உருவாகி தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படும் என கேரளாவை சேர்ந்த பாபு கலயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 
 
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போதே இவர் இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது இந்த ஆண்டும் சுனாமி ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது, இந்திய பெருங்கடலில் ஏற்படும் அதிபயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழுந்து இந்தியாவில் தமிழக, கேரள கடலோர மாவட்டங்கள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகள் அழிவை சந்திக்கும் என கூறியுள்ளார்.
 
இவர் கூறுவதற்கு ஏற்றார் போல், இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல், இந்திய பெரு‌ங்கட‌லி‌ல் ‌நிலநடு‌க்க‌ம் ஏற்ப‌ட்டு‌ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.