திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (12:41 IST)

தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட முயற்சி..! தவறான தகவல்களை பரப்புவதாக ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!!

Rahul
தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற கூட்டத்தில் நான் பேசிய போது  இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை என்றும்  இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
 
Rahul Gandhi
அமலாக்கத்துறை ஏவி விட திட்டம்:
 
இதன் காரணமாக என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சிப்பதாக எனக்கு தகவல்கள் வருகிறது என்றும் நான் திறந்த கரங்களோடு உங்களை வரவேற்கிறேன் என்றும் ராகுல் கூறியிருந்தார்.
 
Giri Raj Singh
பொய் பேசுகிறார் ராகுல்:
 
இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள, மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங், நாடாளுமன்றத்தில் ராகுல் பொய் பேசுகிறார் என்று தெரிவித்தார். வெளியே, அவர் தவறான தகவல்களை பரப்புகிறார் என்றும் கூறினார்.

 
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட அமைச்சர் கிரி ராஜ் சிங், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சி நடந்து வருவதாக கூறி வந்த ராகுல், தற்போது அந்த முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார் என்று விமர்சித்தார்.