Daily Horoscope
✕

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்!.. சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் அப்டேட்...

Updated: செவ்வாய், 6 அக்டோபர் 2026 (18:04 IST)
ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஆந்திராவிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

திருப்பதிக்கு சென்று வழிபடுவது என்பது பலருக்கும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது. சில நேரங்களில் ஒரு நாள் கூட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இந்நிலையில் திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. அதேபோல் அக்டோபர் 12 ,13, 14 மற்றும் 18, 19, 20 ஆகிய தேதியில் தரிசனம் செய்ய https://ttdevasthanams.ap.gov.in/ என்ற இணையதளத்தில் நாளை 10 மணிக்கு முன் பதிவு தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..

சட்டவிரோத குவாரி.. திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை ரத்து..நீதிமன்றத்தில் தவெக அரசு தகவல்...

வெற்றி பயண திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு என்பது உண்மைதானா?

மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணம் செய்யும் மோடி - விஜய்.. பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

நேபாள பேரழிவு.. 37 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர்.. பெரும் ஆச்சரியம்..

அடுத்த கட்டுரையில்
Show comments