திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (08:00 IST)

ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் ED ரெய்டு.. பெயர் மாற்றப்பட்டது அகமதாபாத் மைதானம்: எம்பியின் ட்விட்

ஆஸ்திரேலியா பிரதமர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என்றும் அகமதாபாத் மைதானம் ஜவஹர்லால் நேரு மைதானம் என மாற்றப்பட்டது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பிரேக்கிங் நியூஸ் என்ற தலைப்பில் ட்விட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில்  சமீபத்தில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா தனது சமூக வலைதளத்தில் கிண்டலுடன் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் அகமதாபாத் ஸ்டேடியத்திற்கு ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியம் என மாற்றப்பட்டதாகவும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமான ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கிண்டலுடன் குறிப்பிட்டுள்ள இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva