பத்ரிநாத் அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன்..! 12 பேர் பலி..!!
உத்தரகண்ட் மாநிலத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில். 12 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் அருகே சுமார் 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகில் உள்ள அலகனந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு உள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி குறிப்பிட்டுள்ளார்.