சோனியா, ராகுல், பிரியங்காவிற்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கட்?
சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி சிறப்பு படை பாதுகாப்பை திரும்பபெற உள்ளதாம் மத்திய அரசு.
கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டும் ஏறக்குறைய 3,000 எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.