செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:35 IST)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்.. இதுதான் எனது கனவு: டி.கே. சிவக்குமார்

TK Sivakumar
தமிழ்நாட்டில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் மேகதாது அணை கட்டுவது தான் தனது கனவு என்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்படுத்தபடும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேகதாது அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசு தெரிவித்து வருகிறது. 
 
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியாக இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி மேகதாது அணையை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சி மேகதாது அணையை ஆதரித்து பேசி வருகிறது.
 
இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று மேகதாது அணை குறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் பேசியிருப்பது தமிழக வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran