செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (10:34 IST)

ரூ.15 திருப்பதி காலண்டர் ரூ.150க்கு விற்பனை! – அமேசானால் அதிர்ச்சி!

திருப்பதி தேவஸ்தானத்தில் அச்சிடப்படும் காலண்டர்கள் அமேசானில் அதிக விலைக்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தால் அச்சிடப்படும் காலண்டர்கள், டைரிகள் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காலண்டர்கள் வாங்க போட்டிபோடும் நிலையில் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக காலண்டர்கள் கள்ளசந்தையில் விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் தனது காலண்டர்களை ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானுடன் இணைந்து விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.15க்கு விற்கப்படும் காலண்டர்கள் அமேசானில் ரூ.150க்கு விற்கப்படுவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் புகார் அளித்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் காலண்டர், டைரிகள் வாங்கவே ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுதவிர திருப்பதி தேவஸ்தானத்திலும், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும் காலண்டர்கள் வழக்கமான விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும், ஆன்லைனில்தான் வாங்க வேண்டும் என பக்தர்களை கட்டாயப்படுத்தவில்லை என்றும் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.