செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (15:17 IST)

தடுப்பூசி போட்டிருந்தா தரிசனத்துக்கு அனுமதி! – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் பல இடங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பதி கோவில் பக்தர்கள் வழிபட திறக்கப்பட்ட நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்ட வேண்டும். அல்லது தரிசனத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்டியும் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் வசதிக்காக 25ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.