1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kozhikode university make new law against dowry

வரதட்சணை வாங்கினால் டிகிரி கிடையாது! – கோழிக்கோடு பல்கலைகழகம் அதிரடி!

National
கேரளாவில் வரதட்சணை வாங்கினால் பல்கலைகழக டிகிரி பட்டம் ரத்து செய்யப்படும் என கோழிக்கோடு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையால் தொடர்ந்த உயிரிழப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் வரதட்சணை முறையை ஒழிக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோழிக்கோடு பல்கலைகழகம் வரதட்சணை கொடுமைக்கு எதிராக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோழிக்கோடு பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே பட்டம் வழங்கப்படும். பிற்காலத்தில் வரதட்சணை வாங்கியதாக தெரிய வந்தால் சம்பந்தபட்ட மாணவரின் டிகிரி ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
உலகின் மிகவும் வயதான இரட்டை சகோதரிகள்! – கின்னஸில் இடம்பெற்ற ஜப்பான் பாட்டிகள்!