திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (20:36 IST)

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

arvind kejriwal
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஜூன் 4க்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க முடியுமா என்பதை அமித்ஷா பார்க்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
பஞ்சாப் மாநிலம், லூதியானா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பகவந்த் மான் முதலமைச்சராக இருக்க மாட்டார் என்றும் பஞ்சாப் அரசு கவிழும் என்றும் அமித்ஷா மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
 
தங்களிடம் 92 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் அரசை எப்படிக் கவிழ்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்,  நாட்டில் சர்வாதிகாரம் உள்ளது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஜூன் 4க்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க முடியுமா என்பதை அமித்ஷா பார்க்க வேண்டும் என்றார். 

 
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்,  உள்துறை அமைச்சரும், பிரதமரும் எப்படி பஞ்சாபியர்களை அச்சுறுத்துகிறார்கள் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்றும் கூறினார்.