Daily Horoscope

திருப்பதியில் 3 மாசம் விஐபி தரிசனம் ரத்து!.. தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை...

Updated: சனி, 2 மே 2026 (11:53 IST)
திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஆந்திராவிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகிறார்கள். அதோடு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

எனவே இந்த கோவிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படும். இலவச தரிசனம், விஐபி தரிசனம், குறைந்த கட்டணம் என அங்குபல தரிசனங்கள் இருக்கிறது. ஏழை மக்களும், நடுத்தர மக்களும் இலவச தரிசனத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அதேநேரம் இலவச தரிசனம் செய்ய அங்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது..

அதுவும் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில்,மே 1ம் தேதியான நேற்று உழைப்பாளர் தினம் என்பதால் விடுமுறை என்பதாலும், தொடர்ந்து வார இறுதி நாட்கள் வந்ததாலும் திருப்பதி கோவிலுக்கு பலரும் படையெடுத்தனர். இதன் காரணமாக திருப்பதியில் இலவச தரிசனத்திற்காக மக்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பல கிலோமீட்டர் தூரம் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இதையடுத்து கோடைகாலம் முடியும் வரை இன்னும் மூன்று மாதத்திற்கு வி.ஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. மேலும் பொதுமக்கள் பொறுமையாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments