1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2022 (17:52 IST)

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் திருமாவளவன் - தமிழச்சி தங்கபாண்டியன்!

rahul thiruma
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் திருமாவளவன் - தமிழச்சி தங்கபாண்டியன்!
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த பயணத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். 0 திருமாவளவன் தனது டுவிட்டரில் இந்த பயணம் குறித்து கூறியிருப்பதாவது:
 
புது தில்லியில் திச- 24 அன்று #இந்திய_ஒற்றுமை_பயணத்தில் திரு. ராகுல்காந்தி
 அவர்களுடன் சுமார் 1.15 மணி நேரம் நடந்தேன்.
 
மக்களை எழுப்பும்
மகத்தான பயணம்.
மனுவாத சக்திகளை
வீழ்த்தும் பயணம். 
 
அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுந்த பயணம். அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் பயணம்’ என பதிவு செய்துள்ளார். 
 
 மேலும் இந்த ஒற்றுமை பயணத்தில் திருமாவளவனுடன் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran