புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (19:48 IST)

ஊரடங்கை மீறிய...அமைச்சர் மகனிடம் ஆவேசமாகப் பேசிய பெண்காவலர் வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்த அமைச்சர் மகனிடம் ஒரு பெண் காவலர் பேசிய வீடியோ ஒன்ற் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றுபவர் சுனிதா. இவர் கடந்த புதன் கிழமை அன்று சூரத் பகுதியில் இரவு நேரபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சில கார்களில் வந்துள்ளனர் அவர்களை சுனிதா தடுத்து நிறுத்தியுள்ளார். அவர்கள் சுனிதாவுடன்  வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சரும் பாஜகவை சேர்ந்த கனானானியின் மகன் பிரகாஷை போன் செய்து அழைத்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர் பிரகாஷ் வந்து சுனிதாவிடம் அவர்களை விடுவிக்குமாறு கூறியுள்ளார் அதற்கு சுனிதா மறுத்துள்ளார்.

பின்னர் ஊரடங்கு நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் நான் தடுத்து நிறுத்துவேன் என சுனிதா கூறியுள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த அமைச்சர்  மகன் பிரகாஷ் சுனிதாவை மிரட்டியுள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். சுனிதாவின் தைரியத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு சுனிதா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.கட்டாயப்படுத்தி அவர் ராஜினாமா செய்யப்பட்டுள்ளதாக தகவலும்  வெளியாகிறது.,