போலீஸ் கன்னத்தில் அரைந்த பெண்…வைரலாகும் வீடியோ
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஒரு கிராமத்தில் முத்துராமன் என்பவர் வீடு கட்டிவந்துள்ளார். இந்த வீட்டைக் கட்டித் தருப் பொறுப்பை மேஸ்திரி சுபாஷ் என்பவர் கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையே பணம் சம்பந்தமாக முத்துக்குமாருக்கும், சுபாஷிக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. பின்னர் சுபாஷ் திருவெண்ணெய் காவல்நிலையத்தில் முத்துக்குமார் மீது புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, முத்துக்குமாரை விசாரிக்க வந்த எஸ்.ஐ ஒருவர் இதுகுறித்து விசாரிக்காமல் முத்துக்குமாரை அடித்துள்ளதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த முத்துகுமாரின் மனைவி எஸ்.ஐயின் கன்னத்தில் ஒரு அரைவிட்டார். உடனே அங்கிருந்த மக்கள் அவர்களை சூழ்ந்துகொண்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.